Tuesday, 11 June 2013

இந்திய பட்டதாரிகளிடம் போதிய திறமை இல்லை :ஆய்வில் தகவல்



புதுடெல்லி: இந்தியாவில் பிஇ, எம்பிஏ முடித்த பட்டதாரிகளிடம், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் குறைவாக உள்ளது என்று மேன்பவர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச வேலைவாய்ப்பு நிறுவனமான மேன்பவர், 42 நாடுகளில் தொழிலாளர்களின் திறன் குறித்து ஆய்வு நடத்தியது. இதில், இந்தியாவில் சமீபத்திய பிஇ, எம்பிஏ முடித்த பட்டதாரிகளிடம், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களிடம் கடினமான மற்றும் இலகுவான பணிகளிலும் போதிய திறமை இல்லை என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் திறன்மிக்க தொழிலாளர்களை பணிக்கு தேர்ந்தெடுப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து, திறன்மிக்க தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளதாக 35 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் திறன்மிக்க தொழிலாளர்களை பணியில் நியமிப்பதில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 45 சதவீத நிறுவனங்கள், திறன்மிக்க தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்த நிலையில் இந்த ஆண்டில் இது 35 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல், ஜெர்மனியில் 42 சதவீதம் பேர் மீது குறை கூறியிருந்த நிலையில், இந்த ஆண்டில் 35 சதவீதமாக அது குறைந்துள்ளது.

No comments:

Post a Comment