Tuesday, 11 June 2013

ஷூ’வை கொண்டு தாக்கி பேராசிரியரை கொன்ற காதலி


அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் வசித்தவர் பேராசிரியர் ஸ்டீபன் ஆன்டர்சன் (59). அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இவருக்கு ஆனா துருஜில்லோ(44) என்ற காதலி இருந்தார். சம்பவத்தன்று 2 பேரும் வெளியே சென்று மதுபானம் அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினர். சற்று நேரத்தில் ஆனா அவசர போலீசுக்கு டெலிபோன் செய்து தன்னை அடித்து உதைப்பதாக புகார் கூறினார்.
இதை அடுத்து போலீசார் அவருடைய வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு தரையில் பேராசிரியர் ஸ்டீபன் ஆன்டர்சன் பிணமாக கிடந்தார். அவருடைய தலைப்பகுதியில் ‘ஷூ’வின் குதிங்கால் பகுதியை கொண்டு தாக்கிய அடையாளம் தெரியவந்தது. வாய்த்தகராறில் காதலி ஆனா தனது ‘ஷூ’வினால் தாக்கி பேராசிரியரை கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக காதலி ஆனாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். கொலையுண்ட ஸ்டீபன் கடந்த 2009–ம் ஆண்டு முதல் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர். அதற்கு முன்பு டால்ஸ் நகரில் மெடிக்கல் சென்டரில் துணை பேராசிரியராக இருந்தவர். சுவீடன் நாட்டை சேர்ந்த அவர் ஹூஸ்டன் பகுதியில் தனது காதலியுடன் வசித்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment