Friday, 14 June 2013

மக்கள் தொகையில் சீனாவை முந்துமாம் இந்தியா



மக்கள் தொகையில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, 2028 ஆம் ஆண்டில் சீனாவை முந்திக்கொண்டு முன்னிலைக்கு செல்லுமென ஐ.நா வின் அறிக்கை தெரிவிக்கிறது.

உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை ஐ.நா. சபை நியூயார்க்கில் வெளியிட்டது. அதன்படி, தற்போது சர்வதேச அளவில் மக்கள் தொகை 720 கோடியாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் அது 810 கோடியாக உயரும். அதே நேரத்தில் 2050 ஆம் ஆண்டில் 960 கோடியாக மாறும். இந்த மக்கள் தொகை பெருக்கம் விகிதம் வளரும் நாடுகளில் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment