Sunday, 16 June 2013

மது போதையில் குழந்தையை குத்தி கொன்ற பெண்


அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் கூக்கவுண்டியை சேர்ந்த பெண் இம்பர்லின் பலோனாஸ். இவருக்கு 5 மாதத்தில் இசாக் என்ற ஒரு ஆண் குழந்தை இருந்தது.
சம்பவத்தன்று இவர் கூக்கவுண்டியில் உள்ள லிகைஸ்ன் சதுக்கத்தில் ரோட்டோர ஓட்டலுக்கு தனது குழந்தையுடன் சென்றார். 

பின்னர் அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென போலீசார் வந்து விட்டனர். மதுகுடிக்கும் இடங்களில் குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது. மீறி கொண்டு சென்றால் குழந்தையை போலீசார் தூக்கி சென்று விடுவார்கள். 

இதற்கிடையே போலீசார் அங்கு வந்த போது குழந்தை அழத்தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பலானோஸ் மதுபோதையில் தனது குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்தினார். அதில் குழந்தையின் தலை, மார்பு என உடல் முழுவதும் 21 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. 

மேலும் கழுத்தையும் நெரித்தார். இதனால் படுகாயம் அடைந்த குழந்தை அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது. எனவே பலானோஸ் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
- See more at: http://www.viyapu.com/news_detail.php?cid=13725#sthash.Jkvmym3C.dpuf

No comments:

Post a Comment