Tuesday, 18 June 2013

நிதி நெருக்கடியை சமாளிக்க ராணுவ வீரர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க இங்கிலாந்து அரசு முடிவு




நிதி நெருக்கடியை சமாளிக்க 4 ஆயிரத்து 400 ராணுவ வீரர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. 

இங்கிலாந்து ராணுவத்தின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகியவற்றில் சுமார் 90 ஆயிரம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் சிலர் சர்வதேச இராணுவமான நேட்டோவில் இணைந்து ஆப்கானிஸ்தான் போன்ற தீவிரவாத பாதிப்புகளுக்குள்ளாகிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை தங்கள் வசம் வைத்திருந்த நேட்டோ படைகள் நேற்றுடன் அந்த பொறுப்பை ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியது.

சர்வதேச பொருளாதார நெருக்கடி இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. இதனையடுத்து, பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டது.

இதில் ஒரு கட்டமாக விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்த சுமார் 3800 ராணுவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து விருப்ப ஓய்வுக்காக காத்திருக்கும் முப்படை வீரர்களில் 84 சதவீதம் பேருக்கு ஓய்வு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 4400 வீரர்கள் இங்கிலாந்து ராணுவத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.

விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்தவர்கள் இன்னும் 6 மாதத்திலும், கட்டாய ஓய்வாக வெளியேற்றப்படும் வீரர்கள் இன்னும் ஓராண்டுக்குள்ளாகவும் ராணுவத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.

No comments:

Post a Comment