Sunday, 16 June 2013

கண்களை குருடாக்கும் கருவிழி முத்தம்:



தற்போது பெரும்பாலான காதலர்கள் தங்களது கண்களுக்குள் ஒவ்வொருவர் மாற்றி மாற்றி நக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
ரொமான்ஸுக்காக செய்யும் இந்த ‘கிஸ்ஸிங்’ மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கண்களின் கருவிழிகளை நக்கும் இவ் வினோத பழக்க வழக்கமானது ‘Oculolinctus’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் பாலியல் ரீதியிலாக உச்சத்தை அடைவதாக நம்பப்படுகின்றது.
அதிலும் ஜப்பானில் இந்த பழக்க வழக்கம் ஒருவித காதல் கலாசாரமாகவே மாறியுள்ளது.பெரும்பான்மையான இளம் வயது காதலர்களிடையே இது மிகவும் பிரபலமானது.
அத்துடன் இப்போது ஓரின பாலினத்தினரிடையேயும் திடீரென முளைத்துள்ள இந்த வினோத பழக்கத்தின் காரணமாக நிறைய ஜோடிகளின் கண்களில் தொற்று நோய்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிலும் சில வேளைகளில் சிலருக்கு நிரந்தரமாக கண்கள் குருடாகி விடக் கூடிய அபாயமும் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜப்பானில் மட்டுமன்றி பல நாடுகளில் இவ் வினோத ’உம்மா’ நீண்ட காலமாக பழக்கத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.
அத்துடன் இது தொடர்பான பல விடயங்கள் சமூக வலையமைப்புகளில் பரவிக் கிடப்பதால் பலர் இதை முயன்று பார்ப்பதாகவும் இதனாலேயே நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், விழி வெண்படலமானது நரம்புகள் மிக்க, உணர்வு கூடிய பகுதி என்பதால் இதனை நக்கும் போது வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது என்பது உண்மைதான்.
ஆனால், இப்படி செய்வதால் எளிதாக பாக்டீரியா கடத்தப்படுவதால் கண்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே இளைஞர்கள் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment