இங்கிலாந்தில் உள்ள Buxton நகரத்தில் ஒரு 64 வயது ஒருவர் 37 ஆண்டுகளுக்கு முன் தான் செய்த கொலை ஒன்று ஞாபகம் வந்ததாக போலீஸாரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Buxton நகரத்தை சேர்ந்த Janet Holt வயது பெண், நீண்ட காலமாக Hypnosis என்ற சுயநினைவை இழந்த ஆழ்ந்த தூக்கம் போன்ற நோய்க்கு ஆளானார்.
இதனிடையே திடீரென இயல்பு நிலைக்கு திரும்பிய Janet Hol, 37 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1976 ஆம் ஆண்டில் தான் ஒரு பண்ணையில் வேலை செய்து வந்ததாகவும், அந்த பண்ணையில் வேலை செய்த மற்றொரு பணியாளர் ஒருவரால் தான் இருமுறை கற்பழிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவரை கொலை செய்து பண்ணையிலேயே அவரது பிணத்தை எரித்துவிட்டதாகவும் கூறினார்.
பின்னர் அவர் கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் கூறிய பண்ணையில் பிணத்தின் அடையாளம் எதுவும் கண்டெட்டுக்க போலீஸாரால் முடியவில்லை.
அதே பண்ணையில் வேலை செய்த Fred Handford என்பவர் திடீரென காணாமல் போனதாக 1976ஆம் ஆண்டு உள்ளுர் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் கூறிய கொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment