Tuesday, 25 June 2013

குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருந்தால் நிமோனியா தாக்கும் -ஆய்வு



நகர்புறங்களில் உள்ள அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு அதிக அளவில் நிமோனியா தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

சீனாவில் உள்ள ஸ்கூல் ஆப் எனர்ஜி என்று என்விரான்மென்டை சேர்ந்த பேராசிரியர் ஹுவா கியான் மற்றும் அவரது குழுவினர் நகரங்களில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழும் குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டர்.

சீனா, சைல்ட், ஹோம் அண்ட் ஹெல்த் (China, Child, Home and Health ) என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நான்ஜிங்கில் உள்ள 11 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment