பிட்சாவை கொடுக்கச் சென்ற வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பிட்சா கடையில் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்த 17 வயதான சிறுவன், நேற்று மாலை ஒரு வீட்டுக்கு பிட்சா கொடுக்கச் சென்றான். அந்த வீட்டில் ஒரு பெண் தனியாக இருப்பதை பார்த்து, அவளை பலாத்காரம் செய்ய முயன்றான்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டதை அடுத்து, சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு அப்பெண்ணின் கழுத்தை வெட்டிவிட்டு ஓடிவிட்டான்.
பெண்ணின் கூக்குரல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவளை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக அவன் கைது செய்யப்பட்டு சிறார்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.
No comments:
Post a Comment