புதுக்கோட்டை : பள்ளி மாணவர்கள், "லிப்ட்' கேட்டு ஏறிச் சென்ற, மினி வேன் மீது, தனியார் பஸ் மோதியதில், ஏழு மாணவர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
புதுக்கோட்டை டவுன் பகுதியில், பால் வினியோகம் செய்துவிட்டு, காலி பால் கேன்களுடன், "டாடா ஏஸ்' மினி வேன், நேற்று காலை, 8:50 மணிக்கு, சென்று கொண்டிருந்தது. ஆறுமுகம் என்பவர் ஓட்டிச் சென்றார். உடன், அவரது உறவினர் தியாகராஜன், 45, இருந்தார். அந்த வழியாக, வல்லந்திராக்கோட்டை அரசு பள்ளிக்கு, செல்ல வந்த மாணவர்கள் சிலர், வேனை வழிமறித்து, "லிப்ட்' கேட்டு, ஏறிக் கொண்டனர். அப்போது, எதிரே, வந்த தனியார் பஸ், மினி வேன் மீது, மோதியது.இதில், மினி வேன், சின்னாபின்னமாகி, 50 அடி தூரத்தில், தூக்கி வீசப்பட்டு, கண்மாய்க்குள் விழுந்தது. வேன் பின்புறம் நின்று, பயணம் செய்த ஏழு மாணவர்கள் மற்றும் வேன் டிரைவர் இறந்தனர். பலியான மாணவர்கள் அனைவரும், 12 வயதில் இருந்து, 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.
விபத்தில், இரண்டு மாணவர்கள் உட்பட, மூன்று பேர், பலத்த காயமடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தனியார் பஸ் டிரைவர் பாலச்சந்திரன், 45, தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார், கைது செய்துள்ளனர்.தனியார் பஸ்சில் பயணம் செய்தவர்கள், விபத்து நடந்ததும் அலறியடித்து இறங்கினர். ரத்த வெள்ளத்தில், மாணவர்கள் கிடந்ததைப் பார்த்து, பதைபதைத்து, ஓடினர். வயது முதிர்ந்த பெண் பயணிகள், ஓட முடியாமல், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு, அப்பகுதி மக்கள், தண்ணீர் கொடுத்து உதவினர்.
தனியார் பஸ்களுக்கு தடை:
ஒரே இடத்தில் அடக்கம்:
No comments:
Post a Comment