Thursday, 20 June 2013

டி.வி. செய்தி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி



டி.வி. செய்தி பார்த்து நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளும் ஆர்வம், உலகமெங்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இருக்கிறது. இப்படித்தான் கிரேக்க நாட்டிலும், சம்பவத்தன்று அரசாங்கம் நடத்தி வரும் டி.வி. செய்தி சேனலில் மக்கள் ஆர்வத்துடன் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு பக்கம் டி.வி.யில் செய்தி வாசிப்பாளர் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரது பின்புறம் இருந்த திரையில் ஆபாச சினிமா ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இதை அறியாத செய்தி வாசிப்பாளர், வழக்கம்போல செய்தி வாசிப்பதில் கண்ணும், கருத்துமாய் இருந்து விட்டார்.செய்தியின் மத்தியில் எப்படி ஆபாச சினிமா ஒளிபரபரப்பானது என்று கேட்கிறீர்களா?
அதே அரசு டெலிவிஷன் நிறுவனத்தின் மற்றொரு சேனலில், ஒளிபரப்பாகி கொண்டிருந்த ஆபாச சினிமா படம்தான், தவறுதலாக செய்தி வாசிப்பாளரின் பின்புறம் இருந்ததிரையில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

No comments:

Post a Comment