எகிப்தின் கெய்ரோ நகரில் தொலைக்காட்சி பிரிவு ஒன்றை நடத்தி வரும் மஹ்மூத், ஒரு சமய போதகராகவும் பணியாற்றி வந்தார்.கடந்த செப்டம்பர் மாதம் இஸ்லாமிய மதத் தலைவர் நபிகள் நாயகம் குறித்து அமெரிக்காவின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ தொகுப்பு ஒன்று முஸ்லிம் மக்களிடையே பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.
இதனை எதிர்த்த இவரும் இவரது மகனும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை நடத்தியதோடு தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக அபு இஸ்லாம் என்று அழைக்கப்படும் அகமது, அங்குள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை நடுவீதியில் எரித்தார்.
இச் செயலால் கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்கு விசாரணைகள் முடிவடைந்து அவருக்கு 11 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அவரது மகனுக்கும், எட்டு வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் இருவரும் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியைக் கவிழ்த்த பின், இஸ்லாமிய அரசு அமைந்துள்ள எகிப்து நாட்டில் அம்மதத்தை இழிவுபடுத்துவோருக்கு தண்டனை அளிப்பது என்பது சகஜமாக நடைபெறும் ஒரு விஷயமாகும்.
ஆனால் சிறுபான்மையினராக வாழும் கிறித்துவ மதத்தினருக்கு ஆதரவாக இது போன்ற தண்டனைகள் அளிக்கப்படுவது அரிதான ஒரு செயலாகவே இருக்கின்றது.
No comments:
Post a Comment