Thursday, 27 June 2013

பிரான்சில் இளம் சமுதாயத்தினரை பாதிக்கும் தனிமை வாழ்க்கை





பிரான்சில் வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலைவாய்ப்பின்மை, குறைவான சம்பளம், மற்றும் தங்களுடைய பாரம்பரியமான குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிக்கப்படுவது இவைகளே இவர்களின் தனிமைக்கு காரணம் என்று பிரான்ஸ் ரிவீல்டு நிறுவனம் (France Revealed Foundation) தெரிவித்துள்ளது.
மேலும் தனிமையானது பெரும்பாலும் முதியவர்களையே தாக்கும். ஆனால் தற்போதைய இளைய சமுதாயத்தினரை தாக்குவது வருத்தப்படக் கூடிய ஒன்றாகும்.
கடந்த 2010ல் புள்ளி விபரம் மேற்கொள்ளப்பட்டதில் 18 வயதே நிரம்பிய 12 சதவீதம் பேர் எந்தவிதமான நண்பர்களோ, குடும்ப உறவுகளோ இல்லாமல் வாழ்கின்றனர். அவற்றில் பிரான்சில் 1 மில்லியன் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தவிர நவீன முறையில் தனிமையான வாழ்க்கை வாழ்பவர்களும் அதிகமாக உள்ளனர்.
கடந்த சமுதாயத்தினர் தங்களுடைய வாழ்க்கையை ஒரே இடமான குறுகிய வட்டாரத்தில் முடித்துக்கொண்டனர். ஆனால் தற்போதைய காலங்களில் பல வகையான தொழில்களில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு நாம் தனிமையானவர்கள் இல்லை என்ற மனத்தன்மையோடு வாழவேண்டும்.
பிரான்ஸ் நாட்டில் கலாச்சார குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் 39 சதவீதம் பிரான்ஸ் நாட்டினர் தங்கள் குடும்பங்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் வாழ்கின்றனர்.
குடும்ப உறவுகளில் பலவீனமானவர்கள் தனிநபர்களாக வாழ்கின்றனர். இதற்காக அவர்கள் செலுத்தும் விலை அதிகமாக இருப்பது வருத்தப்படக் கூடிய ஒன்றாகும். நீண்ட கால சமுதாய பழக்கங்கள் உடைந்து கிடப்பதே இதற்கு முக்கியமான காரணமாகும்.
வேலை தேடுவதில் சிரமம், குறைவான வருமானம், குடும்பங்களுடன் முறிவு போன்றவையே 18 முதல் 29 வரையிலான தலைமுறையினருக்கு தனிமை வாழ்க்கை வாழ்வதற்கான காரணம்.
இவர்களிடம் வேலை, நண்பர்கள் மற்றும் தன்னம்பிக்கை கூட கிடையாது.
மேலும் இத்தனிமையின் மூலம் பிரான்சில் பெருநகரங்களில் வாழ்பவர்களை விட கிராமங்களில் வாழ்பவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
பிரான்சில் உள்ள 5,000 மக்களிடம் தொலைபேசியின் மூலம் இந்த புள்ளி விபரம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment