Monday, 17 June 2013

"சமூக அக்கறை கொண்டவர்களாக வழக்கறிஞர்கள் மாற வேண்டும்':சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி


ஸ்ரீநகர்: ""வழக்கறிஞர்கள் எல்லாம், ஏமாற்றுக்காரர்கள் போல, சித்தரிக்கப்படுகின்றனர்; அந்த நிலைமை மாற வேண்டும். சமூக அக்கறை கொண்டவர்கள் வழக்கறிஞர்கள் என்பதை, மக்களுக்கு காட்ட வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் கூறினார்.


ஸ்ரீநகரில் உள்ள, காஷ்மீர் பல்கலைக் கழகத்தில், சட்ட மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது: சமூகத்திற்காக பாடுபட வேண்டிய பொறுப்பு, வழக்கறிஞர்களுக்கு உள்ளது. அதனால், அவர்கள் சட்ட உதவி பணிகளில், அதிக அளவில் பங்கேற்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கான சிலவற்றை செய்து கொள்வதற்காக, சட்டம் உருவாக்கப்படவில்லை. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறி வரும் உலக சூழ்நிலையில், சட்டம் படித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், அவர்கள் சமுதாயத்திற்காக கொஞ்சமாவது செய்ய வேண்டும். 

கார்ட்டூன்களில் எல்லாம், வழக்கறிஞர்கள், ஏமாற்றுக்காரர்கள் போல, சித்தரிக்கப்படுகின்றனர். அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். சமூக அக்கறை கொண்டவர்கள் வழக்கறிஞர்கள் என்பதை, மக்களுக்கு செயல்பாடுகள் மூலம் காட்ட வேண்டும். புதிதாக சட்டப்படிப்பை முடித்து வருபவர்களை, நாம் ஊக்கப்படுத்தினால், எதிர்காலத்தில், அவர்கள் திறமையான வழக்கறிஞர்களாக வருவர். 

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக, பணியாற்றத் துவங்கிய, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், ஆரம்பத்தில், வழக்குகளில் வாதாட மிகவும் தயங்கினார். "நன்றாக வாதிட வேண்டும்' என, நான் அவரை ஊக்கப்படுத்தினேன். இன்று அவர் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவ்வாறு அல்டமாஸ் கபீர் கூ

No comments:

Post a Comment