மயிலாடுதுறை: மகன் கீழே தள்ளியதால், தந்தை இறந்தார்; மகனை, போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர், சோமசுந்தரம், 45. கூலித் தொழிலாளியான இவருக்கு, இந்திராணி என்ற மனைவியும், ரமேஷ், 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்த சோமசுந்தரம், மொபைல் போனில் ரமேஷ் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து, அவனிடமிருந்து, போனைப் பிடுங்கினார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரமேஷ் தள்ளியதில், சோமசுந்தரம், அருகில் இருந்த உரல் மீது விழுந்தார். படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, வழியிலேயே இறந்தார். புதுப்பட்டினம் போலீசார், ரமேஷை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி, தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
No comments:
Post a Comment