Wednesday, 26 June 2013

மிஸ்டு கால்' மும்பைக்கு பிளஸ்-2 மாணவி ஓட்டம்



வெள்ளக்கோவில் வரட்டு கரையை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் முத்தூரில் கார் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மகள் அகிலா (வயது 17). பிளஸ்-2 முடித்துள்ளார். சம்பவத்தன்று அகிலா மதிப்பெண் சான்றிதழை ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிவிட்டு முத்தூருக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. 

அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன் வெள்ளக்கோவில் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பல கோணங்களில் ஆலோசித்தனர். வயதை கருத்தில் கொண்டு காதல் விவகாரமாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். 

எனவே அகிலாவின் செல்போன் எண்ணை ஆராய்ந்தனர். அதில் ஒரு எண் மட்டும் அடிக்கடி பயன் படுத்தப்பட்டு மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட செல்போன் எண் யாருடையது என்று ஆராய்ந்தனர். அப்போது அந்த செல்போன் எண் கோவை போத்தனூரில் உள்ள நந்தகுமார் (21) என்பவருடையது என தெரியவந்தது. 

அதன்பேரில் போத்தனூர் வந்த போலீசார் நந்தகுமாரை தேடினர். அவர் அங்கு செல்போன் கடை வைத்திருந்ததும் கடந்த சில நாட்களாக அவரையும் காணவில்லை என்றும் தெரிய வந்தது. விசாரணையில் செல்போன் மிஸ்டு காலால் அகிலாவுக்கும் நந்தகுமாருக்கும் காதல் ஏற்பட்டது தெரியவந்தது. 

இதன் தொடர்ச்சியாக 2 பேரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. தற்போது அவர்களது செல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த தகவலை இந்தியில் தெரிவிக்கிறது. 

மேலும் ஆராய்ந்ததில் மும்பையில் உள்ள ஒரு டவரின் முகவரியை காட்டியது. எனவே காதல் ஜோடியினர் மும்பையில் பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் மேல் நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்கள்.

No comments:

Post a Comment