தேவகோட்டை: குடிபோதையில், தினமும் துன்புறுத்திய கணவனை, தலையில் கல்லைப் போட்டு, கொன்ற மனைவி, கைது செய்யப்பட்டார். சிவகங்கை, தேவகோட்டையைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 47; குடிப்பழக்கம் உள்ளவர். தினமும் போதையில் வந்து, மனைவி ஜோசபின் ராணியை, துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, போதையில் தகராறு செய்தார். கோபமடைந்த ஜோசபின்ராணி, கணவர் தூங்கிய பின், தலையில் கல்லைப் போட்டார்; பிழைத்து வந்தால், கொன்று விடுவார் என்ற அச்சத்தில், எரித்துக் கொலை செய்தார். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக, முதலில், போலீசாரிடம் தெரிவித்த ஜோசபின்ராணி, முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பின், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Wednesday, 19 June 2013
போதை கணவரை கொன்றார் மனைவி

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment