Tuesday, 25 June 2013

உறவுக்கார நபரால் பாலியல் கொடுமை - சிறுமி கர்ப்பம்!




உத்தர பிரதேச மாநிலத்தில் உறவுக்கார நபரால் 10 மாதங்களுக்கு பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் தாம்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 26 வயது உறவுக்காரர் ஒருவர் கடந்த 10 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

தான் தகாத முறையில் நடந்துக்கொள்வதை வெளியே சொன்னால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடுமென உறவுக்கார நபர் மிரட்டியதால் அந்த சிறுமியும் இது குறித்து யாரிடமும் ஏதும் கூறாமல் இருந்துள்ளார். 

இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். அவர் கர்ப்பமான பிறகே நடந்த விஷயம் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.

உறவுக்கார நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் 

No comments:

Post a Comment