Wednesday, 26 June 2013

குடித்துவிட்டு வந்ததால் ஆத்திரத்தில் மகனை கொன்றார் தந்தை


சீர்காழி : நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் அருகே உள்ள நத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரன் (52). இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களது மகன் சுரேஷ்குமார் (27), பிஎஸ்சி பட்டதாரி. தந்தை, மகன் இருவரும் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தனர். 20 ஆண்டுகளாக சவுதியில் இருந்த சங்கரன், மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்ப்பதற்கு வந்தனர். பின்னர் மயிலாடுதுறையை சேர்ந்த பெண் ஒருவர் மணமகள் என முடிவானது. பெண் வீட்டில் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். விடிந்தால் நிச்சயதார்த்தம் நடக்க உள்ள நிலையில் குடித்துவிட்டு வந்ததால் தந்தை கண்டித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சங்கரன், அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து மகனை அடித்தார். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தவரை, அருகிலிருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்க கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். தகவலறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீசார், சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள சங்கரனை தேடிவருகின்றனர்

No comments:

Post a Comment