Tuesday, 11 June 2013

எடையை குறைக்க புதுமையான பிளாஸ்டிக் நாக்கு


உடல் எடையை குறைக்க பலர் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள். அப்படியும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எடை குறையவில்லையே என மனக்குறை சிலருக்கு ஏற்படுகிறது. இந்த குறையை போக்க அமெரிக்காவை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் ஒரு புதுமையான வழிமுறையை கண்டுபிடித்திருக்கிறார்.
அதாவது நாக்கில் ஒரு பிளாஸ்டிக் துண்டை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அது கடினமாக அதிக கலோரி உணவுப்பொருட்களை சுவைக்கும் போது வலியை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்த்து விடுவோம். அதே நேரத்தில் திரவ பொருட்களை பருகினால் ஒன்றும் செய்யாது. இதன் மூலம் ஒரே மாதத்தில் 14 கிலோ எடையை குறைக்க முடியும் என்று நிபுணர் தெரிவிக்கிறார். இதற்கு ஆகும் செலவு சுமார் ரூ.1 லட்சம் (2 ஆயிரம் டாலர்கள்) ஆகும்.

No comments:

Post a Comment