Saturday, 15 June 2013

: மனைவிக்கு, எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, விவாகரத்து கேட்ட கணவருக்கு, மும்பை ஐகோர்ட், கண்டனம்



கருத்து வேறுபாடு:


மும்பையைச் சேர்ந்தவர், பிரகாஷ் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கு, மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கும், 2009ல், திருமணமானது. ஆறு மாதங்கள் மட்டுமே, சேர்ந்து வாழ்ந்தனர். பின், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மும்பை ஐகோர்ட்டில், பிரகாஷ், விவாகரத்து கோரி, மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அவர் கூறியிருந்ததாவது: என் மனைவி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சந்தேகிக்கிறேன். அடிக்கடி, அவளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எய்ட்சால் பாதிக்கப்பட்டோர் சாப்பிடும் மருந்தை, அவள் சாப்பிடுவதை, ஒருமுறை பார்த்தேன். திருமணமான சில மாதங்களிலேயே, அவளை பிரிந்து விட்டேன். எனவே, என் மனைவிக்கு, எச்.ஐ.வி., பரிசோதனை நடத்த வேண்டும். மனைவியிடமிருந்து, விவாகரத்து அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், அவர் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி, ரோஷன் தால்வி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் பிறப்பித்த உத்தரவு:

முட்டாள்தனம்:


மனுதாரர் பிரகாஷ், மனைவி மீது, பல புகார்களை கூறி உள்ளார். அந்த புகார்கள், உண்மை யானவை என்பதை, மனுதாரர் தான், நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து, மனைவிக்கு, எச்.ஐ.வி., சோதனை நடத்தும்படி, அவர் கோருவது, முட்டாள் தனமானது. இந்த வழக்கை பார்க்கும்போது, மனுதாரர், தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வது இல்லை என்ற, முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. எனவே, தன் மனைவியுடன் கலந்து பேசி, இருவரும் சேர்ந்து, விவகாரத்து கோரலாமே? எதற்கு, விவாகரத்து கோரி, தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, உத்தரவிட்ட நீதிபதி, பிரகாஷ் தாக்கல் செய்த, மனுவையும், தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment