பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்து ரசித்த வாலிபரை பிடித்து பெண்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவனை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மங்களூர் அருகே நடைபெற்றுள்ளது.
மங்களூர் அருகே விட்டலா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அனந்தாடி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 28). கூலி தொழிலாளி. இவர் அந்தப் பகுதியை சேர்ந்த பெண்கள் குளிக்கும்போது மறைந்திருந்து பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதனால் ராம்குமாரை கையும், களவுமாக பிடித்து ஒப்படைக்கவும் அந்தப் பகுதி பெண்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராம்குமார் அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் இளம்பெண் குளித்துக் கொண்டு இருந்ததை மறைந்திருந்து பார்த்துக்கொண்டு இருந்தார். இதை கவனித்த இளம்பெண் இதுகுறித்து அந்தப் பகுதி பெண்களிடம் தெரிவித்தாள்.
இதைத்தொடர்ந்து அந்தப் பகுதி பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராம்குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை விட்டலா போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விட்டலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் பெண்கள் குளிக்கும் காட்சியை பார்த்து ரசித்த ராம்குமார், அதை செல்போனில் படம் பிடித்தாரா? என்பது குறித்தும் அறிய அவரது செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் விட்டலா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment