லண்டன்: 40 முதல் 100 சதவீத இந்திய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் கணவன்மார்கள் தான் குற்றவாளிகளாக உள்ளனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். இந்த ஆய்வு லண்டனில் உள்ள சுகாதார பள்ளி மற்றும் தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சி நிலையம் உதவியுடன், உலக சுகாதார நிறுவனத்தால் மேற் கொள்ளப்பட்டது. பெண்களின் மீதான வன்முறை சர்வதேச அளவில் எப்படி இருக்கிறது என்பது ஆய்வின் கருவாகக் கொள்ளப்பட்டது. அதில், மணமான பெண்கள் மீதான வன்முறையில் அவர்களின் கணவர் அல்லது முன்னாள் கணவரின் பங்களிப்பே அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தியர்களின் நிலை தான் மிகவும் மோசமாம்.ஆய்வாளர்கள் இது சம்பந்தமாக 66 உலக நாடுகளில் இருந்து 4, 92, 340 கொலை வழக்குகளை வைத்து செய்யப்பட்ட 118 ஆய்வுகள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் தெரிய வந்துள்ளது.
, பெண்களின் மரணத்துக்கு பெரிதும் காரணமாக அமைவது தற்போதைய கணவர்கள் அல்லது முன்னாள் கணவர்கள் தான் என தெரிய வந்துள்ளது. மேலும் கணவர்களே மனைவிகளைக் கொல்வது மற்றவர்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாம்.7ல் ஒருவன்... 7ல் ஒரு கொலைக்கு தனது துணைவனே காரணமாகிறான் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். இது கிட்டத்தட்ட 13.5 சதவீதம் ஆகும்.பொதுவாக பெண்களின் கொலையில் 38.6 சதவீதம் ஆண் துணையும், ஆண்களின் கொலையில் 13.5 பெண் துணையும் பங்கெடுக்கிறார்களாம்.அதிலும் குறிப்பாக, தென் கிழக்கு ஆசியாவில் ஆண் துணையே மனைவியைக் கொல்லும் அளவு மிக அதிகம். அதாவது, 58.8 சதவீதம்.மொத்தத்தில் 41.2 சதவீதக் கொலைகள் அதிக வருமானம் உள்ள நாடுகளான ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, கனடா, டென்மார்க் போன்ற நாடுகளில் அதிகமாம்குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் கொலைக்கான அளவும் குறைந்து காணப்படுகிறதாம். உதாரணாத்திற்கு, ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் எனப் பதிவாகியுள்ளது......
No comments:
Post a Comment