கூடுவாஞ்சேரி காந்தி நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் சாகுல் அமீது (47). இவரது மனைவி சகிலா (40). இவர்களுடைய மகள் பாத்திமா (22) இவரை திண்டிவனத்தைச் சேர்ந்த ஜின்னா (35) என்பவருக்கு 2-ம் தாரமாக திருமணம் செய்து வைத்தனர்.
பாத்திமா 3 ஆண்டு காலம் ஜின்னாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். ஜின்னா தினமும் குடித்து விட்டு வந்து அடித்து உடைத்ததால் பாத்திமா கணவருடன் சண்டை போட்டு விட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த ஒரு வருடமாக இருந்து வந்தார்.
இதற்கு பெற்றோர் சமரசம் பேசி பாத்திமா கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்து இருந்தனர். ஜின்னாவும் பாத்திமாவை அழைத்து செல்ல தயாராக இருந்தார்.
ஜின்னாவுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் பாத்திமா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி 4 வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கிறார்கள்.
No comments:
Post a Comment