Tuesday, 11 June 2013

பள்ளி பஸ்சிலிருந்து தவறி விழுந்த சிறுமி



கோவை: கோவையில், தனியார் பள்ளி பஸ் சென்று கொண்டிருந்தபோது, அவசர வழி கதவு திடீரென்று திறந்ததால், சீட்டில் அமர்ந்திருந்த, ஐந்து வயது சிறுமி, தவறி கீழே விழுந்தார்.

கோவை - பொள்ளாச்சி ரோட்டில், தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு சொக்கனூரை சேர்ந்த லீனா, 5, சிறுமி யு.கே.ஜி., படித்து வருகிறாள். நேற்று மாலை வகுப்பு முடிந்த பின், பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் லீனா, உட்பட, 46 சிறுவர், சிறுமியர் பயணம் செ#தனர்.கல்லாங்காட்டுபுதூரைச் சேர்ந்த, சக்திவேல், 38,என்பவர் பஸ்சை ஓட்டினார். தண்ணீர்பந்தல் உள்ளிட்ட, இடங்களில் குழந்தைகளை இறக்கிய பின், பஸ் சென்று கொண்டிருந்தது.

வழியில், இடதுபுற திருப்பத்தில் பஸ் திரும்பியபோது, பஸ்சில், அவசர வழி கதவு (எமர்ஜென்சி எக்ஸிட்) அருகேயுள்ள சீட்டில் உட்கார்ந்திருந்த லீனா, திடீரென்று கதவு திறந்ததால் ரோட்டில் தவறி விழுந்தாள்.இதை பார்த்த, அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் சத்தம் போட்டதும், டிரைவர் கோபால் பஸ்சை நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக, அப்போது அவ்வழியே வாகனங்கள் எதுவும் வராததால், சிறுமி லீனா லேசான காயத்துடன் உயிர் தப்பினாள்.உடனடியாக, சிறுமியை அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பகுதி மக்கள் பஸ்சை சிறை பிடித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றன

No comments:

Post a Comment