Tuesday, 11 June 2013

ஏரியில் படகு கவிழ்ந்து புதுமண தம்பதி பலி

ஆலப்புழாவில் ஏரியில் படகு கவிழ்ந்து புதுமண தம்பதி பலி
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சாகர் (வயது 30). இவரது மனைவி நாகமணி (23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. சாகர் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நாகமணியும் என்ஜினீயரிங் படித்துள்ளார். 

இவர்கள் இருவரும் தங்கள் தேன்நிலவை கொண்டாட கேரளா சென்றனர். ஆலப்புழாவில் உள்ள பிரசித்தி பெற்ற புன்னமுட காயலில் இவர்கள் 2 பேரும் படகில் உல்லாச சவாரி சென்றனர். அந்த படகை சாஜன் என்பவர் ஓட்டினார். தற்போது பெய்துள்ள மழை காரணமாக அந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி காட்சி அளித்தது. 

இவர்கள் படகு ஏரியின் ஆழமான பகுதியில் சென்றபோது திடீர் என்று பலத்த காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி புதுமண தம்பதிகள் சாகர்-நாகமணி பரிதாபமாக உயிர் இழந்தனர். இவர்களில் நாகமணியின் உடல் உடனடியாக மீட்கப்பட்டது. சாகரின் உடலை தேடி வருகிறார்கள். படகோட்டி சாஜன் நீந்தி கரை ஏறி தப்பி விட்டார். 

இந்த விபத்தில் தப்பிய சாஜன் கூறும்போது, ஏரியில் படகு ஓட்டிக் கொண்டிருந்தபோது திடீர் பலத்த காற்று வீசியதால் என்னால் படகை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் படகு கவிழ்ந்து விட்டது. ஆழம் அதிகமாக இருந்ததால் என்னால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றார்

No comments:

Post a Comment