Friday, 21 June 2013

பாலியல் சம்பவங்களுக்குடெலிவிஷன் சேனல்களில் விவாதங்கள் நடத்துபவர்கள்-ஆபாச படங்களில் தொடர்பு உடையவர்கள்--மம்தா பானர்ஜி -


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளித்து டி.வி. செய்தி சேனல்கள் விவாதங்கள் ஒளிபரப்புவது குறித்து மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.
புர்த்வான் மாவட்டத்தில் கால்சி என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘’பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பாக டி.வி. சேனல்களில் விவாதங்கள் நடத்தப் படுகின்றன.

ஒவ்வொரு நாள் மாலைப்பொழுதிலும், இத்தகைய நபர்கள் ஒன்று அல்லது இரண்டு சம்பவங்கள் தொடர்பாக மனசாட்சி இல்லாத டெலிவிஷன் சேனல்களில் விவாதங்கள் நடத்துகின்றனர். இப்படி அவர்கள் விவாதம் நடத்தி, வங்காளத்தின் தாய்மார்கள், மகள்களை அவமானப்படுத்துகின்றனர்.  குழந்தைகளுக்கு தெரியக்கூடாத தகவல்கள் புகட்டப்படுகின்றன.
டெலிவிஷன் சேனல்களால் அழைக்கப்படுகிற இந்த நபர்கள் யார்? இவர்களில் பலர் ஆபாச படங்களில் தொடர்பு உடையவர்கள். ஆனால் இவர்கள் தங்களை சமூக சேவகர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். இவர்கள் பணத்துக்காக வேலை செய்பவர்கள்தான்’’என்று கூறியுள்ளார். 
மம்தா பானர்ஜியின் இந்தப்பேச்சு மேற்கு வங்காளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போராட் டங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

No comments:

Post a Comment