அசாம் மாநிலத்தில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற 5 ராணுவ வீரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலம், லகிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தனது சகோதரருடன் கவுகாத்தியில் இருந்து காமக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கடந்த வியாழக்கிழமை பின்னிரவு நேரத்தில் திப்ருகர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தார்.
ரெயில் நிலையத்தில் உள்ள ஓய்வு அறைகளில் அந்த இளம்பெண்ணும் அவரது சகோதரரும் தனித்தனியாக தங்கினர்.
அந்த பெண் தனியறையில் தங்குவதை வேவு பார்த்த ராணுவ வீரர்கள் 5 பேர், முதலில் சகோதரன் தங்கியிருநத அறை கதவை வெளிப்பக்கமாக தாழிட்டனர்.
பின்னர், அந்த பெண் தங்கியிருந்த அறை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த அவர்கள் அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து கற்பழிக்க முயன்றனர்.
அந்த காமுகர்களின் பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ள போராடிய அவர் அழுது கூச்சலிட்டார்.
ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து அந்த பெண்ணை காப்பாற்றினர். அத்துடன், தகாத செயலில் ஈடுபட்ட ராணுவ விரர்கள் 5 பேருக்கும் 'தர்ம அடி' போட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
மந்தீப் சிங், ஜோஷி, பிஷ்ணு பகதூர் ராணா, அரிந்தர் சிங், கமல் பகதூர் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் விசாரணைக் காவலில் அவர்களை சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment