Wednesday, 26 June 2013

நண்பனை காப்பாற்ற சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு

மத்தூர் அருகே நண்பனை காப்பாற்ற சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் குலாப்ஜான். இவரது மகன் சதாம் உசேன் (வயது 23). மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று சதாம் உசேன் தனது நண்பர்களான அரிஸ்குமார் (19). மகேந்திரன் (29), சல்மான் (20) ஆகியோரை பார்க்க சென்றார். பின்னர் நண்பர்களுடன் அவர் குளிக்க கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி. டேம் சென்றார். 

குளித்து கொண்டு இருந்த போது மதகு அருகே சென்ற அரிஸ்குமார் சுழலில் சிக்கிக் கொண்டார். அவர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். அப்போது இதனை பார்த்த சதாம் உசேன் அந்த பகுதிக்கு சென்றார். சுழலில் சிக்கி தவித்த அரிஸ் குமாரை காப்பாற்றினார். அப்போது தண்ணீரில் தவறி விழுந்த சதாம் உசேன் மூழ்கி இறந்தார். 

இது பற்றி உடன் இருந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சதாம் உசேன் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நண்பனை காப்பாற்றி உயிர் இழந்த சதாம் உசேன் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.

No comments:

Post a Comment