சீனாவில் சமீப காலமாக குழந்தைகளை அனாதைகளாக விட்டு செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டலில் தங்கியிருந்த சீன பெண் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை கழிவறையில் வீசினார்.
அந்த குழந்தையை அதிகாரிகள் காப்பாற்றினர். இதனை அடுத்து குழந்தைகள் தத்தெடுப்பில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற சீன அரசு உத்தரவிட்டுள்ளது. அனாதைகளாக விட்டு செல்லும் குழந்தைகளை தனியார்களோ அல்லது குழுவினரோ தத்தெடுத்து வளர்ப்பதற்கு சீன அரசு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment