
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கின்றனர்.
இதனையொட்டி ஐக்கிய அரபு குடியரசின் பிரதமரும், துணை ஜனாதிபதியுமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்க விரும்பினார்.
இதனையடுத்து உலகம் முழுவதும் வறுமையில் வாடும் 30 லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு ஆடைகள் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய அரபுக் குடியரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம், ஷேக் முகமதுவின் நன்கொடை பெறுபவர்கள் எண்ணிக்கை ஆரம்பத்தில் 1.5 மில்லியனாக இருந்ததாகவும், பின்னர் அது இரட்டிப்பாகியுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
ஷேக் முகமது கூறுகையில், தாராள மனம் கொண்ட ஐக்கிய அரபுக் குடியரசின் மக்கள் இந்தப் பிரச்சாரத்தில் பங்கு கொண்டதன் விளைவாக இந்தப் புனிதத் திருநாள் 30 லட்சம் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது
No comments:
Post a Comment