Saturday, 18 May 2013

தோழியை மணக்க ஆசைப்பட்ட லெஸ்பியான்மாணவி



பிவானி: தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம், பிவானியைச் சேர்ந்த, 17 வயது மாணவி, சக மாணவி ஒருவருடன் நீண்ட நாட்களாகப் பழகி வந்தார். இருவரும், பிவானி மாவட்டம், சன்வார் கிராமத்தில் உள்ள, சீனியர் செகன்டரி பெண்கள் பள்ளியில் படிக்கின்றனர். இந்த ஆண்டு, பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 வகுப்புக்கு செல்கின்றனர்.

மூன்று ஆண்டுகளாக, நெருங்கிய தோழிகளாக பழகி வந்த இவர்களில், ஒரு மாணவி, "நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்' என, தன் தோழியிடம் கூறினார். தோழியின் இந்த வார்த்தையை கேட்டு, அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, இதுபற்றிய விபரத்தை, தன் வீட்டாரிடம் கூறினார். அவர்களும், மகளின் தோழியை அழைத்து கண்டித்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ள தோழி மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த மாணவி, மீண்டும் ஒரு முறை தோழியின் வீட்டிற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த மாணவி, தன் தோழியை கத்தியால் குத்தினார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

கத்தியால் குத்தியவர் மாணவி என்பதால், அவருக்கு உரிய வகையில், கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

No comments:

Post a Comment