சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஒருவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியதால் பிரம்படி தண்டனையில் இருந்து தப்பினார். அவருக்கு 14 மாதம் சிறைத் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது.
அவரது பெயர் பெனிதா (21). இவர், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினார். அவரது வீட்டு கதவை தீ வைத்து கொளுத்தினார் என்பது குற்றச்சாட்டு.
சிங்கப்பூரில் ஆண்கள் இதுபோன்ற குற்றங்களைச் செய்தால் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழக்கம். எனினும் குற்றம் செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பே பெனிதா, தாய்லாந்து சென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறிவிட்டார்.
இதனால் அவருக்கு ஆண்களுக்கு வழங்கப்படும் தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக 14 மாதம் சிறைத்தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது.
பெண்ணாக மாறுவதற்கு முன்பு, அவரது பெயர் கவிராஜ் தாமரைச்செல்வன் என்று இருந்தது. பின்னர் பெனிதா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போது அவர் பெண்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment