Monday, 1 July 2013

4 லாரிகளில் வந்த ரூ. 2500 கோடி பணம் பறிமுதல்

மும்பை: 4 லாரிகளில் வந்த ரூ. 2500 கோடி பணம் பறிமுதல்

மும்பை வழியாக பணம் மற்றும் தங்கம் கடத்தப்பட இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு மும்பை சென்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாலைகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.  

இரவு 9 மணியளவில் நடந்த இந்த சோதனையின் போது 4 லாரிகளில் ரூ.2500 கோடி கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதவிர ஏராளமான தங்கமும், நகைகளும் அந்த லாரிகளில் இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த பணம் மற்றும் தங்கம் கடத்தல் தொடர்பாக 47 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

வருமான வரித்துறை அதிகாரிகள் 150 சூட்கேஸ்களில் இருந்த இந்த பணத்தை தெற்கு மும்பையில் உள்ள அலுவலகத்தில் வைத்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த லாரிகள் மும்பையின் புறநகர் பகுதியில் இருந்து மும்பை மத்திய ரயில்வே நிலையத்துக்கு வந்து கொண்டிருந்ததாகவும்,  அங்கிருந்து அவை அகமதாபாத்துக்கு குஜராத் விரைவு ரயில் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இந்த லாரிகள் மும்பை தெற்கு மும்பை வி.பி ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிந்த போலீஸ்காரர்களின் பாதுகாப்புடன் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. லாரியில் வந்தவர்களுக்கும், இந்த போலீசாருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது

No comments:

Post a Comment