திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உட்பட இடங்களில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள், இளம்பெண்கள் காணாமல் போகின்றனர். இவர்கள் கடத்தப்படுவதாக பெற்றோர் புகார் அளிக்கின்றனர். ஆனால் போலீஸ் விசாரணையில், பின்னணியில் காதல் கதை இருப்பது தெரிகிறது. 65 பேர் மாயம்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் 11 வரை 17 வயதுள்ள இளம்பெண்கள் 65 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களில் காதல் வலையில் சிக்கிய பல சிறுமிகளை போலீசார் கண்டுபிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். காரணம்: திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர் மகாலட்சுமி கூறுகையில்,""17 வயதிற்குட்பட்டவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று தெரியாது. இந்த நேரத்தில் அன்பாக யார் பேசுகிறார்களோ, அவர்களை நம்பி ஏமாறுகின்றனர். பருவ மாற்றத்தில் ஏற்படும் பிரச்னைகளை பெற்றோர் தீர்க்க வேண்டும். ஆசிரியர்களும் நண்பர்களை போல பழகி, அவர்களின் பிரச்னை தீர்க்கலாம். சினிமா, "டிவி' சீரியல்களில் வரும் சம்பவங்கள் உண்மையென நம்பி, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள், காதல் வயப்படுகின்றனர். இவற்றை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்,''என்றார். திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறுகையில்,""17 வயதிற்குட்பட்ட இளம்பெண்களும், வாலிபர்களும் காதல் வயப்பட்டு, ஓடிப்போகின்றனர். பலரை, கண்டுபிடித்து நாங்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளோம். இது மாதிரி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.
Tuesday, 11 June 2013
17 வயது இளம்பெண்கள் மாயம் அதிகரிப்பு: "காதல்' காரணம்: போலீஸ் விசாரணையில் தகவல்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment