Tuesday, 11 June 2013

கள்ள காதலியுடன் இருந்த கிராம நிர்வாக அதிகாரியை, வீட்டுக்குள் வைத்து, மனைவி பூட்டு




திருநெல்வேலி : விதவையுடன் இருந்த, கிராம நிர்வாக அதிகாரியை, வீட்டுக்குள் வைத்து, மனைவி பூட்டு போட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், மருதன்வாழ்வு கிராம வி.ஏ.ஓ., முத்து, 35. இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நெல்லை அடுத்த, கே.டி.சி.நகரில் வாடகை வீட்டில், மனைவி மாலா, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தூத்துக்குடி, பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் சத்யா, 25. இவர் கணவர் நாகராஜன், ஆறு மாதங்களுக்கு முன், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது, இறப்பு சான்றிதழ் பெறச் சென்றபோது, வி.ஏ.ஓ., முத்துவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யாவிற்கு, ஒரு ஆண் குழந்தை உள்ளது. வி.ஏ.ஓ., முத்து, சத்யாவிற்கு, பாரதி நகரில், வாடகைக்கு வீடு எடுத்து, தங்க வைத்தார்; அடிக்கடி அங்கு சென்று சந்தித்து வந்துள்ளார். கணவனின் நடவடிக்கைகளில், மனைவி மாலாவிற்கு, சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள், சத்யாவின் வீட்டிற்கு, மகனையும் அழைத்துச் சென்றார் முத்து. அப்பா சென்றிருந்த இடத்தையும், அங்கு இனிப்பு தந்ததையும், சிறுவன் தாயிடம் கூறினான்.
இதில் ஆத்திரமடைந்த மாலா, கணவனை, கையும் களவுமாக பிடிக்கத் திட்டமிட்டார். நேற்று காலை, பணிக்கு செல்வதாக கூறி, முத்து புறப்பட்டார். நேராக, சத்யா வீட்டிற்கு சென்றார். இதை அறிந்த மாலா, கையில் இரண்டு பூட்டுக்களோடு, அங்கு சென்றார். வீட்டுக்குள், கணவர் முத்து, சத்யாவுடன் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டார். வீட்டின், முன்னும் பின்னும், கதவுகளுக்கு பூட்டு போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அங்கு கூடினர். வீட்டுக்குள் இருந்த முத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்து, மீட்கும்படி வேண்டினார். போலீசார், அங்கு வந்தனர். சத்யாவுடன் பேசி, பூட்டுக்களை திறந்தனர். பின், மூவரையும், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக, வழக்கு எதுவும் பதிவு செய்யவில்

No comments:

Post a Comment