Sunday, 2 June 2013

திறந்த வெளியில் மல, ஜலம் கழித்த 354 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி நீக்கம்:

திறந்த வெளியில் மல, ஜலம் கழித்த 354 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி நீக்கம்: மகாராஷ்டிரா அரசு அதிரடி

திறந்த வெளியில் மல, ஜலம் கழிப்பதனால் உண்டாகும் சுகாதார சீர்கேட்டினை களையும் நோக்கில் 'சம்பூர்ணா சுவாச்சட்டா அபியான்' என்ற திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. 

இந்த திட்டத்தை கிராமப் புறங்களை சிறப்பாக செயல்படுத்த மாநில ஊரக மேம்பாட்டு அமைச்சகம், கிராம பஞ்சாயத்துகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த உத்தரவின்படி தேர்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், கிராம சேவகர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிவறை வசதி செய்யப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. 

இதன் பின்னர், மாவட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் 354 பஞ்சாயத்து உறுப்பினர்களின் வீடுகளில் கழிவறை வசதி செய்யப்படாமல் இருந்தது தெரிய வந்தது.

இவர்கள் கழிவறைகளை அமைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய கால அவகாசம் அளித்திருந்தது. அவகாச காலம் முடிந்த பிறகும் கழிவறைகளை அமைத்துக்கொள்ளாத 354 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து சந்திராபூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இவர்களில் 27 பேர் சந்திராபூர் பஞ்சாயத்து, 17 பேர் பத்ராவதி பஞ்சாயத்து, 15 பேர் வரோரா, 7 பேர் சிமூர், 9 பேர் சிண்டேவாஹி, 15 பேர் முல், 18 பேர் சவோலி, 14 பேர் டொம்புர்னா, 64 பேர் கோண்ட்பிப்ரி, 17 பேர் பல்லார்பூர், 54 பேர் ரஜுரா, 33 பேர் கோர்ப்பனா, 58 பேர் ஜிவ்டி பஞ்சாயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஆவார்கள்.

No comments:

Post a Comment