குஜராத் மாநிலம், கேடா மாவட்டம், பஹாட் கிராமத்தை சேர்ந்தவர் மேலாபாய் (40), அதே கிராமத்தை சேர்ந்த சம்பாபென் (30) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
இந்த தொடர்புக்கு கிராமத்தில் எதிர்ப்பு தோன்றியது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு ஏதாவது ஊருக்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று சம்பாபென், மேலாபாயை வற்புறுத்தி வந்தார்.
இதற்கு அவர் இணங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சம்பாபென் வக்ரக் ஆற்றங்கரைக்கு மேலாபாயை வரவழைத்தார்.
உறவினர் சிலரின் துணையுடன் மேலாபாயை கல்லால் அடித்தே கொன்ற அவர், பிணத்தை வக்ரக் ஆற்றில் தூக்கி வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் கிராமத்திற்கு சென்று விட்டார்.
தனது தம்பியை காணவில்லை என்று மேலாபாயின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் சம்பாபென்னை விசாரித்த போலீசார், நடந்த சம்பவத்தை கூறிய அவரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment