பிரான்ஸ் நாட்டில் லியான் நகரில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், அதில் ஈடுபடுபவர்கள் யார் என துப்பு துலக்க முடியவில்லை.
இந்த நிலையில், கொள்ளை நடந்த ஒரு வீட்டின் கதவில் காது ரேகை பதிந்து இருந்தது. அதை பிரிண்ட் எடுத்து பார்த்தபோது இதே ரேகை கொள்ளை நடந்த பல வீடுகளில் பதிந்து இருந்தது. அதுவும் ஒரே நபரின் ரேகை என்பது தெரிய வந்தது. இதை வைத்து ஜார்ஜியாவை சேர்ந்த 26 வயது வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணை நடத்தியபோது அவன் 80 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதே பாணியில் ஜார்ஜியாவை சேர்ந்த 4 பேரை லியான் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 75 கொள்ளைகளில் சம்பந்தப்பட்டவர்கள். இதே பாணியில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்கப்படுகிறது
No comments:
Post a Comment