Sunday, 2 June 2013

சிறுபான்மையின மக்களின் சமூக - பொருளாதார, கல்வியறிவு மேம்பாட்டுக்கு ரூ. 17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- மந்திரி ரஹ்மான் கான்

சிறுபான்மையின மக்களின் சமூக - பொருளாதார, கல்வியறிவு மேம்பாட்டுக்கு ரூ. 17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சச்சார் கமிட்டியின் பரிந்துறையின்படி சிறுபான்மை இனத்தவரின் சமூக - பொருளாதாரம் மற்றும் கல்வியறிவு மேம்பாட்டிற்காக 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 17 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என மத்திய மந்திரி ரஹ்மான் கான் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ரஹ்மான் கான் கூறியதாவது:-

சச்சார் கமிட்டியின் 72 பரிந்துரைளில் 69-ஐ மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், இந்தியா அவாஸ், மற்றும் பிரதமரின் 15 அம்ச திட்டம் ஆகியவற்றின் மூலமாக 15 சதவீதம் முஸ்லிம்கள் பலன் அடைவார்கள்.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 98 மாவட்டங்களில் அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வங்கிகளில் வழங்கப்படும் கல்வி கடன் தொகையில் 15 சதவீதம் முஸ்லிம்களுக்கு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் இச்சலுகைகள் 195 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். இதற்காக, ரூ. 17 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment