புதுடில்லி:"திருமணம் செய்து கொள்கிறேன் என, பொய்யாக உறுதியளித்து, பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டாலும், அந்த உறவு கற்பழிப்பாகவே கருதப்படும்' என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த, அபிஷேக் ஜெயின் என்பவர், இளம்பெண் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி, அந்தப் பெண்ணுடன், பல முறை உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், சொன்னபடி, திருமணம் செய்யவில்லை.
இதை கண்டித்து, அப்பெண், போலீசில் புகார் கூறவே, போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, அப்பெண்ணை திருமணம் செய்த அந்த நபர், திருமணத்திற்கு பின், அப்பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்துள்ளான். இதனால் அவள், அவனை விட்டு வெளியேறுவாள் என, நினைத்தான்.
ஆனால், அப்பெண்ணோ, அவன் மீது, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள். அதில், தன்னை ஏமாற்றிய கணவன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டாள்.
இதை அறிந்த அபிஷேக் ஜெயின், முன்ஜாமின் கோரி, ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தான். அந்த வழக்கு, நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்ததாவது:
பெண்ணின் அனுமதியின்றி, உடலுறவு வைத்துக் கொள்வது, கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. அது போல், திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணுடன் உடல் உறவு வைத்துக் கொண்டு, மோசடி செய்து ஏமாற்றுவதையும், கற்பழிப்பாகவே கருத முடியும். எனவே, அபிஷேக் ஜெயினுக்கு, முன்ஜாமின் வழங்க முடியாது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment