Sunday, 9 June 2013

உறவுக்கு மறுத்ததால், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்



பள்ளிபாளையம்:உறவுக்கு மறுத்ததால், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, கணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், நாற்றாம்பள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 33. அவரது மனைவி ராஜேஸ்வரி, 28. கடந்த, 4ம் தேதி, பள்ளிபாளையம் அடுத்த வீரப்பம்பாளையத்தில், வாடகை வீட்டில் குடியேறி, தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தனர்.
நேற்று காலை, 10:30 மணிக்கு, கணவன், மனைவிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் நீடித்த சண்டை முடிந்ததால், இருவரும் வீட்டுக்குள் சென்றனர்.
பின், நீண்ட நேரமாக எவ்வித சத்தமும் இல்லாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அங்க, ராஜேஸ்வரரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தார்.
பள்ளிபாளையம் போலீசார், வீட்டின் ஓடுகளை பிரித்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, ராஜேஸ்வரி, காய் நறுக்கும் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர், சுடிதாரின் டாப்ஸ் மட்டுமே அணிந்திருந்தார்.
அருகில், கணவரற் ராமகிருஷ்ணன், நைலான் கயிற்றில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர், வெறும் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தார்.
விசாரணையில், மனைவி உறவுக்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.
போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment