Friday, 7 June 2013

லண்டன் மசூதியில் தீ: பழிவாங்கும் செயலா?

லண்டன் மசூதியில் தீ: ராணுவ வீரர் கொலைக்கு பழிவாங்கும் செயலா?


லண்டன் நகரின் தென்கிழக்கில் உள்ள வுல்விச் என்ற பகுதியில், கடந்த மே மாதம் 22 ஆம் தேதி, லீ ரிக்பி என்ற ராணுவ வீரரை, புரட்சியாளர்கள் கொலை செய்தனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசு ஈடுபடுவதை எதிர்க்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அன்றுமுதல், இருபிரிவினரும் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.

நேற்று புதன்கிழமை, இங்கிலாந்து நாட்டு நேரப்படி காலை 3.20 மணிக்கு வடக்கு லண்டனில், முஸ்வெல் ஹில் பகுதியில் உள்ள சமுதாய மையம் ஒன்று தீப்பற்றி எரிவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் வந்துள்ளது. 6 தீயணைப்பு வண்டிகளுடன் சென்ற 35 தீயணைப்பு வீரர்கள் போராடி, 4.40 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

ஆனால், தீயினால் அங்கிருந்த மசூதி முற்றிலும் சேதமடைந்தது. அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதில்தான் சோமாலிய வீரர்களுக்கான நல்வாழ்வு மையம் இயங்கி வந்தது. அருகில் இருந்த மற்ற இரண்டு கட்டிடங்களில் இருந்தவர்களும் பத்திரமாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஒரு பெண் மட்டும் அதிர்ச்சியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மசூதியின் சுவற்றில் எழுதப்பட்டு இருந்தவை லண்டன் பாதுகாப்புக் குழுவைக் குறிப்பதாக இருந்ததால் அதுகுறித்த விசாரணையில், தீவிரவாத எதிர்ப்பு காவல்துறையினர் இறங்கியுள்ளனர். அமைதியான சமூகத்தினரான தங்களுக்கு நடந்த இந்த அழிவு சோகத்தை அளிக்கின்றது என்று சோமாலிய தொண்டு நிறுவன உறுப்பினர் அலி அபு தெரிவித்தார். 

முஸ்லிம் எதிர்ப்பும் பெருகி உள்ளதாகவும், அதுகுறித்த கவனம் வேண்டும் என்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் அமைப்பின் ஆர்வலர் ஃபியாஸ் முகல் கூறினார். சோமாலியர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பாதுகாப்பும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment