Saturday, 8 June 2013

பழங்குடிமணப்பெண்கள் 350 பேருக்கு கற்பு, கர்ப்ப பரிசோதனை:



மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பெடுல் மாவட்டத்தில் அரசு நிர்வாகம் 'முக்கிய மந்திரிகள் கன்யாதான் யோஜனா' திட்டத்தின் மூலம் கூட்டுத்திருமணத்தை நேற்று முன் தினம் நடத்தியது. 

இந்த திருமணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட மணப்பெண்களிடம் கன்னி தன்மை குறித்த சோதனையும், கர்ப்ப பரிசோதனையும் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சோதனைக்கு ஆளானவர்களில் 90 பேர் பழங்குடியின பெண்கள் ஆவார்கள். 

இது அரசு, அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனையடுத்து இச்சோதனைகளுக்கு உத்தரவிட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி ஒரு வாரகாலத்திற்கு அறிக்கை சமர்பிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment