Saturday, 8 June 2013

பிச்சை எடுத்த சிறுமி மீது 'ஆசிட்' ஊற்றியவர்

ஆந்திரா: பிச்சை எடுத்த சிறுமி மீது 'ஆசிட்' ஊற்றியவர் கைது
வாய்பேச முடியாத 8 வயது பிச்சைக்கார சிறுமி மீது ஊதாரி ஒருவன் ஆசிட் ஊற்றிய சம்பவம் ஆந்திர மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத் அருகேயுள்ள ஜெட்டிமெட்லா பகுதியில் உள்ள பொது கழிவறை அருகே சமீரா(8) என்ற பேச்சுத் திறனற்ற சிறுமி நேற்று காலை பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். 

அப்போது அவ்வழியாக வந்த நரசிம்ம ராவ் என்ற ஊதாரி, குடி போதையில் சமீராவின் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடி விட்டான். 

அதிர்ஷ்டவசமாக ஆசிட் அந்த சிறுமியின் பின்புறத்தில் பட்டதால் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் சமீராவை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்று அனுமதித்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சிறுமி மீது ஆசிட் வீசிய நரசிம்மா என்பவன் வீடு வாசல் இன்றி ஊதாரியாக சுற்றித்திரியும் ஆசாமி என்பது தெரியவந்துள்ளது. அவனை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment