Friday, 7 June 2013

சிறுமி பலாத்காரம்: பள்ளி மாணவன்



புதுச்சேரி: மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த, பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டான். புதுச்சேரி, அரியாங்குப்பம், மணவெளியை சேர்ந்தவர் கண்ணப்பன், 40; இவரது மகள் சர்மிளா, 8 (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அங்குள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவமணி, 13 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சர்மிளாவை அழைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மின் தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்தது. இதை பயன்படுத்திய சிவமணி, சர்மிளாவை, தூக்கி சென்று, பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். கடைக்கு சென்ற மகளை காணவில்லை என, அவரது தாய் தேடி வந்தார். அப்போது வழியில் சர்மிளா அழுது கொண்டிருந்தார். நடந்ததை தாயிடம் கூறினார். பின், சிறுமி, அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரையடுத்து, சிவமணியை, போலீசார் கைது செய்து, முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மாணவன் கைது செய்யப்பட்டதை அறிந்த, அப்பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை, நேற்று காலை முற்றுகையிட்டனர். "குற்றவாளிக்கு நாங்களே தண்டனை கொடுக்கிறோம், வெளியே அனுப்புங்கள்' என, கூச்சலிட்டனர். பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால், போலீஸ் ஸ்டேஷன் மெயின் கேட் மூடப்பட்டது. ஆவேசமடைந்த மக்கள், கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதியளித்தையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment