Saturday, 8 June 2013

கற்பழிப்பால் உருவான என் குழந்தையை அரசு பராமரிக்க வேண்டும்:

கற்பழிப்பால் உருவான என் குழந்தையை அரசு பராமரிக்க வேண்டும்: இளம்பெண் கோரிக்கை


கற்பழிப்பின் மூலம் கருத்தரித்த குழந்தையை டெல்லி அரசு பராமரிக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார். 

கற்பழிப்பு சம்பவத்தின் மூலம் கருத்தரித்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் டெல்லி கோர்ட்டில் மனு செய்தார். 

கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க கோர்ட் மறுத்துவிட்டதால் தற்போது அந்த பெண் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

கற்பழிப்பு சம்பவத்துக்கு பின்னர் பெற்றோர் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட அந்த பெண் தற்போது கோர்ட் அறிவுறுத்தலின்படி பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை டெல்லி அரசுதான் பராமரிக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார். 

'எனக்கு 19 வயது தான் ஆகிறது. பெற்றோரின் ஆதரவோ, வேறு யாரின் ஆதரவோ இல்லாமல் நான் தனியாக கஷ்டப்படுகிறேன். 

எனது குழந்தையை காப்பாற்ற என்னிடம் பணம் ஏதும் இல்லை. பிரசவத்திற்கு பின், என் குழந்தையை டெல்லி அரசு தான் காப்பாற்ற வேண்டும். 

இதுதொடர்பாக கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளேன்' என்று அந்த பெண் கூறினார்.

No comments:

Post a Comment