சென்னை: "குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெற்றாலும், கட்சியில் உயர்வு பெற்றாலும், எனக்கு மகிழ்ச்சி' என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா, திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுடன் பேசுவதற்காக, நேற்று காலை, டில்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவரிடம், பா.ஜ., தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்டது, கூட்டத்தில் அத்வானி பங்கேற்காதது குறித்து கேட்டபோது,""பா. ஜ., கட்சியின் உட்கட்சி விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில், நரேந்திர மோடி எனக்கு நெருங்கிய நண்பர்; மிகச்சிறந்த நிர்வாகி. அவர் குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், கட்சியில் உயர்வு பெற்றாலும், எனக்கு மகிழ்ச்சி,'' என்றார்.
No comments:
Post a Comment