Sunday, 9 June 2013

மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி உள்ளது-ஆர்.எஸ்.எஸ். கருத்து


பாரதீய ஜனதா தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திரமோடி நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து, அந்தக் கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘பாரதீய ஜனதா மற்றும் மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நரேந்திரமோடியை தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதை வரவேற்றுள்ளது. அந்தக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், ‘‘மோடியை தேர்வு செய்திருப்பது அந்த கட்சியின் சொந்த முடிவு. இது பாரதீய ஜனதா மீதான மதிப்பை உயர்த்தும். இதேபோன்று கூட்டணி கட்சிகளின் நிலையையும் உயர்த்தும்’’ என்று கூறினார்.
அதே நேரத்தில் விசுவ இந்து பரிஷத் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதுபற்றி அதன் சர்வதேச பொதுச்செயலாளர் பிரவீண் தொகாடியா கூறுகையில், ‘‘விசுவ இந்து பரிஷத்தை பொறுத்தமட்டில் தனிப்பட்ட நபர்களை பார்ப்பதில்லை. எங்களுக்கு கட்சி, தேசம், சித்தாந்தம்தான் தனிப்பட்ட நபர்களை விட பெரியது’’ என்றார்

No comments:

Post a Comment