Sunday, 9 June 2013

தொல்லை தந்த மாமனார் வெட்டிய மருமகள்



பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டம் பனாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ராதே ஷியாம் சிங்.

வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மருமகள்களுக்கு பாலியல் தொல்லை தருவதையே தனது பொழுதுப்போக்காக செய்து வந்துள்ளார்.

குடும்ப மானம் கப்பலேறி விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அவரை கண்டித்து, மன்னித்து விட்ட மருமகள்கள் மாமனாரின் மன்மத லீலையைப் பற்றி வேறு யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.

இது, ராதே ஷியாமிற்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. அவரது அத்துமீறல் எல்லைமீறி வந்தது.

இரு தினங்களுக்கு முன்னர், சமையலறையில் சின்ன மருமகள் காய்கறி நறுக்கி கொண்டிருந்த போது, பின்புறத்தில் அவரை கட்டிப்பிடித்து களியாட்டத்தில் ஈடுபட முனைந்துள்ளார்.

அந்த பெண் கூச்சலிடவே, பக்கத்து அறையில் இருந்த மற்றொரு மருமகள் ஓடிவந்து, ஓரகத்தியை காப்பாற்றி, மாமனாரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

சற்று நேரத்திற்கு பின்னர், போதை தலைக்கேறிய நிலையில் தன்னை எச்சரித்து அனுப்பி வைத்த இன்னொரு மருமகளை மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்தார்.

‘இந்த கிழம் இனியும் திருந்த வாய்ப்பே இல்லை’ என தீர்மானித்த மருமகள்கள் இருவரும் வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியால் ராதே ஷியாமின் இரு கைகளையும் வெட்டித் துண்டித்தனர்.

ரோடாஸ் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது வாரணாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருமகள்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment